Homeசெய்திகள்சென்னைதனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் - வழக்கறிஞர் எம்.வேல்முருகன்

தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – வழக்கறிஞர் எம்.வேல்முருகன்

-

- Advertisement -

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக  உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.தனிப்பெருங்கட்சியாக  உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் - வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தனிப்பெருங்கட்சியாக  உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.வேல்முருகன் கடிதம் வழங்கியுள்ளாா்.

மேலும், குறித்த காலத்துக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவும், முதல்வரை நியமிப்பது ஆளுநரின் அரசியலமைப்பு சட்ட கடமை; நியமனத்தை நிறுத்திவைக்க சிறப்புரிமை அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மாளிகை சட்டமன்றம் அல்ல; சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

we-r-hiring

திமுக – அதிமுக கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெகவுக்கு  ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க அழைத்து; விரைவில் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

பதவியேற்ற 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பெரும்பான்மையை நிரூபிக்க கூறக்கூடாது. அரசு அமைய வாய்ப்புகள் உள்ள போது குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரைக்க கூடாது.

தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பதில் மேலும் தாமதம் ஏற்படுத்துவது அரசியல்சட்ட விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் விரோதமானது.

தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையைக் காக்கவே தவெகவிற்கு ஆதரவு – ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விளக்கம்

MUST READ