Homeசெய்திகள்சென்னைஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து

ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்து

-

- Advertisement -

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது எனவும், ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.ஏஐ தொழில் நுட்பத்தை இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் – நீதிபதி கருத்துதென்னிந்திய அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் சார்பில், உலக அறிவுசார் சொத்துரிமை தின விழா, திநகரில் உள்ள தனியார்  விடுதியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில் உள்ள அறிவு சார் சொத்துரிமைகள், ஒப்பந்தங்கள் தொடர்பான அறிவு சார் சொத்துரிமைகள் தொடர்பாக கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், கிரிக்கெட் வீரர் டோனியின் ஹெலிகாப்டர் சாட் மிகவும் பிரபலமானது, ஆனால் அதை அறிவு சார் சொத்துரிமையில் கொண்டு வர வெளிநாடுகளில் இருப்பது போல் இந்தியா சட்டத்தில் இல்லை என்றும் விளையாட்டு துறையில் கிடைக்கும் தரவுகளை பாதுகாத்து அதை அறிவுசார் சொத்துரிமையாக பாதுகாக்க வழிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

இதன் பின் நிகழ்ச்சியில் கலந்துரையாடி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏஐ தொழில் நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி மட்டுமே என தெரிவித்தார்.

நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா? இல்லையா என்பதை கத்தி முடிவு செய்வதில்லை என்றும் அதை நாம் தான் முடிவு செய்கிறோம் அதே போல் தான் ஏஐ தொழில் நுட்பமும் என்றார்.

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது என்று குறிப்பிட்ட அவர் கற்றல் அனுபவம், ஆழ்ந்த அறிவு ஆகியவை கிடைக்காமல் போவதற்கான ஆபத்துகளும் ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் உள்ளது என்பதையும் இளம் தலைமுறையினர் உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

வண்டலூர் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை வருகை – குவியும் சுற்றுலா பயணிகள்

MUST READ