Homeசெய்திகள்சென்னை"லீவும் தர மாட்டேங்குறாங்க..." - தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்! அதிகாரிகள் கொடுத்த...

“லீவும் தர மாட்டேங்குறாங்க…” – தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்! அதிகாரிகள் கொடுத்த செக் மேட்!

-

- Advertisement -

தாம்பரம் மாநகராட்சி பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகத்தில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.CITU தாம்பரம் மாநகராட்சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்."லீவும் தர மாட்டேங்குறாங்க..." - தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்! அதிகாரிகள் கொடுத்த செக் மேட்!ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், தற்போது ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பளம் வழங்கப் படுவதாகவும், அதனை 500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வார விடுமுறை வழங்கப் படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல சுகாதார அலுவலர் CHO  பூபேஷ் போராட்டத்தில் ஈடுபட்டு வருந்த வர்களுடன் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, உங்கள் கோரிக்கைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என CHO பூபேஷ் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அன்றாட பணிகளுக்காக கலைந்து சென்றனர். இதனால் பழைய பெருங்களத்தூர் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.1,11,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

we-r-hiring

MUST READ