spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் நீர்நிலை

பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் நீர்நிலை

-

- Advertisement -

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை.

சென்னை திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பால் அப்பகுதி முழுவதுமே பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை

we-r-hiring

திருவெற்றியூர் இந்திரா நகர் நீர்நிலைப் பகுதியில் அதிக அளவிலானா பறவைகள் குவிந்துள்ளன. வெயில் காலம் தொடங்கிய முதலே கோடையின் வெப்பத்தை தாங்க முடியாமல் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் இறை தேடியும் ஒரு இடத்தை விட்டு மாற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம்.

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை

அந்த வகையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரக்கூடிய நிலையில் திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள நீர்நிலைப் பகுதியில் அதிக அளவிலான வெளிநாட்டு பறவைகள் படை எடுத்து இரைகளை தேடி உட்கொண்டு வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால் அவ்வழியாக சாலையில் செல்லும் நபர்கள் சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை

குறிப்பாக விதவிதமான நாரைகளும் வெளிநாட்டு பறவை வகைகளும் நீர் நிலைகளில் படர்ந்து சிறகடித்துக் கொண்டு இருப்பதை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்று மினி சரணாலயமாக திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதி காட்சியளிக்கிறது.

MUST READ