Homeசெய்திகள்சென்னைதிருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ

திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ

-

- Advertisement -

திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம.எல்.ஏ

மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.

சென்னை திருவொற்றியூர் பகுதியில்  மதுமதி என்கிற பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் கூடாது –  நிதின் கட்கரி

கடந்த 16ஆம் தேதி அன்று உறவினர் வீட்டிற்கு சென்று விடு திரும்புவதற்காக சாலையில் நடந்து வந்த கொண்டிருந்த மதுமதியை அந்த வழியாக வந்த எருமைமாடு ஒன்று முட்டி தூக்கி 500 மீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளது.

இதில் கை கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர்

இந்நிலையில் கால் அறுவை சிகிச்சை மற்றும் கை எலும்பு முறிவு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுமதி-க்கு உதவிடும் வகையில் திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி சங்கர் அவரது குடும்பத்தாரை நேரில் அழைத்து மருத்துவமனையில் உள்ள மதுமதியின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் இது குறித்து மருத்துவரிடம் பேசி உள்ளதாகவும் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியினை மருத்துவ செலவிற்கு கொடுத்து  உதவி செய்திருக்கிறார்.

MUST READ