Homeசெய்திகள்சென்னைஉச்சம் தொட்ட தக்காளி விலை- ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை

உச்சம் தொட்ட தக்காளி விலை- ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை

-

உச்சம் தொட்ட தக்காளி விலை- ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை

கடந்த இரண்டு தினங்களாக கிலோ 140 ரூபாய்க்கு மொத்த விற்பனையில் விற்கப்பட்டு வந்த தக்காளி தற்போது 10 ரூபாய் உயர்ந்து கிலோ 150 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகிறது.

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு... பொதுமக்கள் கவலை!
File Photo

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து சந்தையில் குறைந்ததால் அதன் மதிப்பு ரூ.100- க்கு மேல் ஒரு கிலோவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகளில் பலர் சில வாரங்களில் கோடீஸ்வரர்களாக மாறிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் 160 ரூபாய்க்கு தக்காளி ஒரு கிலோ விற்கப்படுகிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், இஞ்சி விலையிலும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ