Homeசெய்திகள்சென்னைநிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்குகடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாக்கூரும், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரனும் போட்டியிட்டனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் விஜய பிரபாகரன் தோல்வியடைந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் உட்பட அனைத்து தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் எனவும் விஜய பிரபாகரன் கோரிக்கை வைத்தார். மேலும் அந்த மனுவில் மாணிக்கம் தாகூர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் முக்கியமான தகவல்களை மறைத்துள்ளார் என்றும், வெற்றி பெறுவதற்காக நியாயமற்ற குறுக்கு வழிகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை விஜய பிரபாகரன் தாக்கல் செய்து உள்ளதால், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் தாகூர் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கடந்த மார்ச் 4-ம் தேதி மாணிக்கம் தாகூர் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் மாணிக்கம் தாகூர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணிக்கம் தாகூர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தனது கோரிக்கையை பரிசீலிக்க தவறிவிட்டது என்றும், விரிவான விசாரணையை நடத்தாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த விவகாரத்தில் தனக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும் என தெரிவித்ததோடு, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனுக்களை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்கவும் விரைந்து விசாரணையை நடத்தி முடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மறுபரிசலினை தேவை என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் அதனை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!

 

MUST READ