Homeசெய்திகள்சென்னைவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் கே.என்.நேரு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – அமைச்சர் கே.என்.நேரு

-

- Advertisement -

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் கே.என்.நேருசென்னையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 40 செமீ பெய்தால் என்ன செய்வது? எனவே தான் போருக்கு தயாராவதை போல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் கே.என்.நேருசென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன்.நேரு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்புப் பணிக்காக ரூபாய் 67 இலட்சம் மதிப்பில் கூடுதலாக கையினால் இயக்கும் 100 புகைபரப்பும் இயந்திரங்களை களப்பணியாளர்களுக்கு வழங்கினார்.

இதில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, சென்னை முழுவதும் 792 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் வரும் 10 ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.

53.48 கிலோமீட்டர் நீளமுள்ள 33 கால்வாய்களில் 12 இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.784 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால்கள் 2021 ஆம் ஆண்டு முதல் 24 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டுள்ளது.

350 கிலோமீட்டர் நீளத்திற்கு மேலும் கொசஸ்த்தலை ஆறு கோவளம் வடிநிலைப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.மழைக்காலம் வந்த காரணத்தால் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை வெட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன் கொண்ட 990 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளன. இதில் 100 பம்புகள் புதிதாக வாங்கப்பட்ட அதிக திறன் கொண்டவை. 162 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மரங்கள் மற்றும் மரக்கிளைகளை  விழுந்தால் அகற்ற 280 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் உள்ள பொது சமையல் கூடங்களில் மணிக்கு 1500 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்களிடமிருந்து மழை தொடர்பான புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

மழைக்காலங்களில் கூடுதலாக மருத்துவ முகாம்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொசுக்களால் பரவும் நோய்த்தெடுப்பு பணிக்காக நிரந்தரம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 3368 களப்பணியார்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொசுக்களை கட்டுப்படுத்த 319 மருந்து தெளிப்பான்கள் 54 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 156 ஸ்பிரேயர்கள், 324 புகைப்படப்பும் இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பறப்பும் இயந்திரங்கள், ஆறு ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். மேலும்,

நெடுஞ்சாலைத்துறை மின்சாரத்துறை நீர்வளத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து  மழைக்காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மழை வந்து நீர் தேங்கினால் ஏன் படகுகள் தயார் நிலையில் இல்லை என்று கேட்கிறீர்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் படகுகளை தயார் செய்து வைத்தால் அப்படி என்றால் நீர் தேங்குமா என்று கேட்கிறீர்கள் அனைத்து வகைகளிலும் தயார் நிலையில் உள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சராசரி மழை அளவுக்கு ஏற்ற வகையில் அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

MUST READ