spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவிநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? - பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? – பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

-

- Advertisement -

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பால் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? - பசுமைத் தீர்ப்பாயம் கேள்விவிநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டணம் வசூலித்தால் அந்த நிதி மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத பொருள்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை, ஆபத்து இல்லாத பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே கரைக் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியது. நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளது. கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியை வைத்து சிலை கரைப்புக்குப் பின் கடற்கரையை சுத்தப்படுத்தலாம் என்று பசுமை தீா்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதிஅமைச்சர்கள் ஆலோசனை

we-r-hiring

MUST READ