Homeசெய்திகள்சென்னைசென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?

-

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
மா.பா.பாண்டியராஜன்

ஆவடி மாநகராட்சியில் உள்ள பட்டாபிராமில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் கடும் முயற்சியினால் “டைடல் பார்க்” மற்றும் அதன் எதிரில் “ரயில்வே மேம்பாலம்” என்று இரண்டு மிக முக்கியப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 மாடி உயரத்தில் டைடல் பார்க் கட்டிடம் வளர்ந்து வருகிறது. அந்த டைட்டில் பார்க் திறந்து நடைமுறைக்கு வந்த பின்னர்  ஆவடி மாநகரம் முழுவதும் அபார வளர்ச்சி அடையும். அதன் ஆரம்ப நிலையில் சுமார் 5000 பேர் பணிபுரிவார்கள் என்று அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அடுத்தடுத்து ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பணிபுரிவார்கள் என்று மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

நமது ஆவடி மாநகர எல்லையில் ஆரம்ப நிலையிலேயே 5000 பேர் பணி புரிவார்கள் என்றால் அதன் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதில் பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் எவ்வளவு பேர் பணிபுரிவார்கள்? அவர்களைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்த்தால் ஆவடி மாநகரின் முகமே மொத்தமாக மாறிவிடும். ஆவடி மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவிடும். வளர்ச்சியை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

பட்டாபிராமில் ரயில்வே துறைக்கு சரக்கு பெட்டி தயார் செய்த SSL என்ற நிறுவனம் கடந்த 30 வருட காலமாக மூடப்பட்டு பாழடைந்து கிடப்பதை அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் சடகோபன் ஆகிய இருவரும் பயனுள்ளதாக மாற்ற முயற்சி செய்தனர். இனிமேல் அந்நிறுவனம் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்தனர்.

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சா.மு.நாசர்

அதற்கான ஆவணங்களை RTI வாயிலாகவும், வேறு சில வழியிலும் தேடி எடுத்தனர். அந்த ஆவணங்களை  அப்போதைய ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மா.பா.பாண்டியராஜனிடம் காட்டி அந்த இடத்தைப் பற்றி விளக்கியுள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுடன் கலந்து பேசி SSL நிறுவனம் உள்ள இடத்தில் “டைடல் பார்க்” அமைத்தால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு பெருகும் என்று ஆலோசனை வழங்கினார்கள். ஆவணங்களை வழங்கியதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து பாண்டியராஜனிடம் “டைடல் பார்க்” கொண்டு வருவதற்கான தூண்டுதலை செய்துக் கொண்டே இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கும் ஆலோசனை வழங்கினார்கள்.

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனின் கடும் உழைப்பினால் பட்டாபிராமில் SSL நிறுவனம் இருந்த இடத்தில் “டைடல் பார்க்” கொண்டுவந்து  அடிக்கல் நாட்டினார். பாண்டியராஜனின் கடும் உழைப்பும், தொலை நோக்கு சிந்தனையினால் இன்று “டைடல் பார்க்” 21 மாடி கட்டிடமாக  உயர்ந்து நிற்கிறது.

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சடகோபன் மற்றும் ஜெயக்குமார்

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆவடியில் தொழில்நுட்பப் பூங்கா கொண்டுவரப்படும் என்று  தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆவடி தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கிய சா.மு.நாசரும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நாசரும் வெற்றிப் பெற்றுவிட்டார். திமுக ஆட்சியில் டைடல் பார்க் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனை நடைமுறைக்கு கொண்டுவர ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் முயற்சி செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

MUST READ