Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?

சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?

-

- Advertisement -

சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா விளக்கம்.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆக நியமிக்கப்பட்ட மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மணலி மண்டல அலுவலகத்துக்கு மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

பணியில் அலட்சியம், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுார் என சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு அசத்தல்

இதன் தொடர்பாக பேசிய மாதவி, “லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு பணிக்கு வரக் கூடாது என்ற உத்தரவை மீறியதால் தண்டிக்கப்பட்டுள்ளேன். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி எனக்கு அளிக்கப்பட்ட மெமோவுக்கு பதில் அளித்துவிட்டேன். நான் பணி நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தால் மட்டுமே மெமோ பயனுள்ளதாக இருக்கும்” என்று குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சென்னை மாநகர மேயர் பிரியா, “டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும் லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று விளக்கமளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ