Homeசெய்திகள்சென்னைகோயம்பேட்டில் ‘‘ஜீரோ ஆசிடெண்ட் டே" விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்பேட்டில் ‘‘ஜீரோ ஆசிடெண்ட் டே” விழிப்புணர்வு நிகழ்ச்சி

-

- Advertisement -

ஜீரோ ஆக்சிடண்ட் டே என்பதை வியாபாரிகளும் உணரும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்பேட்டில் ‘‘ஜீரோ ஆசிடெண்ட் டே" விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள உணவு தானிய அங்காடி வளாகத்தில் வியாபாரிகளுக்கான ‘‘ஜீரோ ஆசிடெண்ட் டே” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா சிறப்பு விருந்தனராக பங்கேற்றார். மேலும், போக்குவரத்து காவல் துணை ஆணையர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து காவல்துறை, வியாபாரிகள் இணைந்து உருவாக்கிய ஜீரோ ஆக்சிடண்ட் டே என்ற வாசகம் அடங்கிய “பை”யை கூடுதல் ஆணையர் சுதாகர், விக்ரமராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

கோயம்பேட்டில் ‘‘ஜீரோ ஆசிடெண்ட் டே" விழிப்புணர்வு நிகழ்ச்சிஆணையர் சுதாகர்

ஆகஸ்ட் 26 ம் தேதி விபத்துகள் இல்லத நாளாக மாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் எங்கள் பணியை வியாபாரிகள் எடுத்துக்கொள்ளும் படியும் கேட்டுள்ளோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொண்டு உள்ளோம் என்றார்.

பக்கத்தில் இருக்கும் கடைக்கு தானே என்று ஹெல்மேட் போடாமல் போகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது.  ஜீரோ ஆக்சிடண்ட் டே  விழிப்புணர்வுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

அரிவால் பார்த்தால் மட்டும் பயப்படக்கூடாது ஹெல்மெட் போடவில்லை என்றாலும் பயப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த குறும்படம் வெளியிடப்பட்டது என்று தெரிவித்தார்.

MUST READ