சித்தார்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் தற்போது ‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனர் SU அருண் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் தயாரிக்கிறார். ‘அவள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘ஜில் ஜங் ஜக்’ உள்ளிட்ட 3 படங்களை சித்தார்த் ஏற்கனவே தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நான்காவதாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.
படத்திற்கு ‘சித்தா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் சித்தார்த் கிராமத்துப் பின்புலத்தில் தன் மகளுடன் பைக்கில் வருகிறார். படம் இயக்குனரின் முந்தைய படங்கள் போல பீல் குட் எண்டெர்டெயினராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நயன்தாரா, மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் படத்திலும் சித்தார்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படத்திலும் சித்தார்த் நடித்து வருகிறார்.