Homeசெய்திகள்சினிமாமக்கள் மனதை கவர்ந்ததா விஜய் சேதுபதியின் 'ஏஸ்'? .... ட்விட்டர் விமர்சனம் இதோ!

மக்கள் மனதை கவர்ந்ததா விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’? …. ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் ஏஸ் பட ட்விட்டர் விமர்சனம்.மக்கள் மனதை கவர்ந்ததா விஜய் சேதுபதியின் 'ஏஸ்'? .... ட்விட்டர் விமர்சனம் இதோ!

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஏஸ். இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மிணி வசந்தி, யோகி பாபு , பப்லு பிரித்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (மே 23) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி ரசிகர் ஒருவர், “முதல் 30 நிமிடங்கள் காதல் காட்சிகள் மற்றும் சில நகைச்சுவை காட்சிகளுடன் தொடங்குகிறது. அதன் பின்னர் இந்த படத்தின் கதை சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த் இடம் பெறும் அனைத்து காட்சிகளும் நன்றாக இருக்கின்றன. விஜய் சேதுபதி – யோகி பாபு காம்போவின் நகைச்சுவை சூப்பர். இன்டர்வெல் அருமை” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “சரியான டைம்பாஸ் பொழுதுபோக்கு படம். விஜய் சேதுபதி -யோகி பாபு கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. தியேட்டர் முழுவதும் சிரிப்பு அதிர்வுகள். ருக்மிணி வசந்த் தனது தமிழ் அறிமுகப்படுத்தி ஒரு முழுமையான வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் ஆறுமுக குமார் ஒரு சரியான நகைச்சுவை நிறைந்த படத்தை வழங்கியிருக்கிறார். இது பார்வையாளர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது” என்று தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “உருகுது பாடல் மற்றும் பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவு அருமை. விஜய் சேதுபதி- யோகி பாபு காம்போ சூப்பர். நகைச்சுவை பல காட்சிகளை சிறப்பாக்கியது. ஆனால் லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருக்கிறது. சில காட்சிகள் சலிப்படைய வைக்கிறது. முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதியில் தொய்வுகள் இருக்கின்றன. கிளைமாக்ஸ் முழுமை இல்லாமல் இருக்கிறது. மொத்தத்தில் கன்னியமாக எழுதப்பட்ட கமர்சியல் படம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படம் ஆவரேஜ் ஆக தான் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ