பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியாகி சுமார் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து பிரபாஸ், தி ராஜாசாப், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் பிரபாஸின் 25 வது படமாகும். இதில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அடுத்தது இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் சம்பள இப்படத்திலிருந்து விலகி உள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தீபிகா படுகோன், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவதாகவும், சொன்னதை விட அதிக நாட்கள் ஷூட்டிங் எடுத்தால் அதற்கு அவர் எக்ஸ்ட்ரா பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக படக்குழு வேறு நடிகையை தேடி வருகிறார்களாம்.
அதன்படி ஸ்பிரிட் படத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக ருக்மிணி வசந்த் நடிக்க உள்ளார் என்றும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல் கிடைத்துள்ளது.
ருக்மிணி வசந்த், விஜய் சேதுபதியின் ஏஸ், சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.