- Advertisement -
சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் சார்பில் நடக்கும் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். குறிப்பாக 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. அதுமட்டுமன்றி தேர்வாகும் சிறந்த திரைப்படங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
