69 ஆவது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் யார் யாருக்கு விருதுகள் வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய விருது வழங்கும் விழாக்களில் ஒன்றான ஃபிலிம் ஃபேர் விருது விழா குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2024ஆம் ஆண்டில் 69ஆவது ஃபிலிம் ஃபேர் விருது விழாவாக நடைபெற்ற இந்த விழாவை ஆயுஷ்மான் குரானா, கரண் ஜோஹர் , மணீஷ் பால் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினர். மேலும் இவ்விழாவில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், ஜான்வி கபூர், வருண் தவான்,கார்த்திக் ஆர்யன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த விழாவில், சிறந்த படத்திற்கான விருது 12th Fail திரைப்படத்திற்கும்
சிறந்த இயக்குனருக்கான விருது, விது வினோத் சோப்ராவுக்கும்
(12th Fail) வழங்கப்பட்டது. மேலும் விமர்சகர்களின் தேர்வு அடிப்படையில் ஜோரம் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.
அனிமல் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை ரன்பீர் கபூர் வென்றார். ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திற்காக சிறந்த நடிகை விருதை ஆலியா பட் வென்றார்.
சிறந்த இசைக்கான விருதை அனிமல் திரைப்படம் வென்றது. அனிமல் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஹர்ஷவர்த்தன் ராமேஸ்வர் வென்றுள்ளார்.
சிறந்த VFX பணிகளுக்காக ஜவான் படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் நிறுவனம் வென்றுள்ளது.
பதான் படத்தில் இடம்பெற்ற பேஷாரம் ரங் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஷில்பா ராவ் வென்றார்.
அனிமல் படத்தில் அர்ஜன் வைலி பாடலுக்காக பூபிந்தர் பப்பல், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை வென்றார்.
மேலும் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த சண்டை பயிற்சியாளர், சிறந்த அறிமுக நடிகர், நடிகை, சிறந்த வசனம், சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.