Homeசெய்திகள்சினிமாநீலாம்பரி கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது..... பிரபல நடிகை ஓப்பன் டாக்!!

நீலாம்பரி கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது….. பிரபல நடிகை ஓப்பன் டாக்!!

-

கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், அப்பாஸ், மணிவண்ணன், செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் தான் படையப்பா. நீலாம்பரி கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது..... பிரபல நடிகை ஓப்பன் டாக்!!கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படம் இன்று வரையிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு படமாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த நீலாம்பரி எனும் கதாபாத்திரம் இன்றுவரையிலும் பேசப்படுகிறது. நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அசால்ட் செய்திருப்பார். இந்நிலையில் இந்தப் படத்தில் நீலாம்பரி யாக நடிக்க முதலில் பிரபல நடிகை மீனாவிடம் தான் கேட்கப்பட்டதாம். மீனா ஏற்கனவே சிறுவயதிலிருந்தே ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு மகளாகவும் ரஜினிக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்ட நீலாம்பரி கதாபாத்திரத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து நடிகை மீனா, சில மாதங்களுக்கு முன்னால் பேட்டி ஒன்றை கூறியிருக்கிறார். தற்போது அந்த பேட்டி வைரலாகி வருகிறது. நீலாம்பரி கேரக்டரில் நான் தான் நடிக்க வேண்டியது..... பிரபல நடிகை ஓப்பன் டாக்!!அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னை தான் கேட்டார்கள். அப்போது என் அம்மா சம்மதிக்கவில்லை. ரஜினியுடன் இணைந்து பல படங்களை நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றதால் நெகட்டிவ் ரோல் ஒத்து வராது என்று அம்மா கூறினார். எனவே அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ