மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல்வாதிகளுக்கும் மேலாக ஒரு பெரும் முதலாளி அரசாங்கத்தை எப்படி தன் கைக்குள் வைத்துள்ளார் என்பதையும் கார்ப்பரேட் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதையும் தோலுரித்துக் காட்டிய திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி அறிவிப்பு வீடியோ ஒன்றையும் பட குழுவினர் வெளியிட்டு அசத்திருந்தனர். தனி ஒருவன் முதல் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். வில்லனாக நடித்திருந்தாலும் அவரின் சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
எனவே தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பகத் பாஸில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.