Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் தெரியுமா?

‘புஷ்பா 2’ படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்… யார் தெரியுமா?

-

- Advertisement -

புஷ்பா 2 படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 'புஷ்பா 2' படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் தெரியுமா?அதைத்தொடர்ந்து புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. வருகின்ற டிசம்பர் 6ம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் படம் தொடர்பான புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது புஷ்பா 2 திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.'புஷ்பா 2' படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார் தெரியுமா? சமீபத்தில்தான் இவருடைய காட்சிகள் மெல்போனில் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது டேவிட் வார்னர் ஒரு கையில் லாலி பப்பும், மறுக்கையில் தங்க நிற துப்பாக்கியும் வைத்துக்கொண்டு செம மாஸாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ