தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன். இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். அதன் பின்னர் இவருக்கு விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைக்க பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் படமானது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் பல ட்ரோல்களுக்கும் ஆளானார் நெல்சன். இந்நிலையில் தான் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தார். இந்தப் படத்தின் வெற்றிக்கு அனிருதீன் இசையும் பெரும் பலம் சேர்த்தது. அதன்படி இப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
Wowwww!! #Jailer2 🔥🔥🔥❤️
Thalaivar + Ani + Nelsa = Blast-O-Blast!!! 🔥💥💥💥 https://t.co/K5syQC7K9i
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 15, 2025
இது தொடர்பான அறிவிப்பு டீசர் நேற்று (ஜனவரி 14) பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், தலைவர், நெல்சன், அனிருத், காம்போவில் ஜெயிலர் 2 படத்தின் டீசர் ஃபயராக இருக்கிறது எனவும் ப்ளாஸ்ட் ஓ ப்ளாஸ்ட் எனவும் குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.