சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை மாநகரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம், கூலி படத்தில் இணைய உள்ளாராம். அதாவது ரச்சிதா ராம் கூலி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் LCU என்ற கான்செப்ட்டின் கீழ் உருவானதன் படி கூலி திரைப்படம் உருவாகவில்லை என்பதும் இது தனி ஒரு படமாக தான் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


