பிரபல தயாரிப்பாளர் சூர்யா 46 படம் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். மேலும் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூர்யா. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்தது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜூ, அனுபமா பரமேஸ்வரன், பாக்யஸ்ரீ போர்ஸ், நிதி அகர்வால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Suriya46: Producer Nag Vamshi confirms Suriya – VenkiAtluri film💯
“I was waiting for a long time to do movie with #Suriya sir. We are going to show Suriya sir in a way that all Telugu people like to see him🔥. Hopefully it’ll be a very good film for us” pic.twitter.com/OcOEjMdvrI
— AmuthaBharathi (@CinemaWithAB) March 25, 2025
இந்நிலையில் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சூர்யா – வெங்கி அட்லூரி படத்தை தயாரிப்பதை உறுதி செய்திருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது, “சூர்யா சாருடன் படம் பண்ண நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். தெலுங்கு மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் சூர்யா சாரை நாங்கள் காட்டுவோம். இது எங்களுக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.