நடிகர் அதர்வா, இதயம் முரளி படக்குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. அதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் டிஎன்ஏ திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படம் 2025 ஜூன் மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தவிர சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் இதயம் முரளி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து கயடு லோஹர், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன், தமன், ரக்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
Wait for the end 😅❤️
Revisiting the birthday celebrations of our Idhayaa @Atharvaamurali, some lovely moments with the entire team of #IdhayamMurali pic.twitter.com/ze7FHqqIgR
— DawnPictures (@DawnPicturesOff) May 9, 2025

காதல் மற்றும் நட்பு கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அதர்வா, படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.