Homeசெய்திகள்சினிமாசின்னத்திரைக்கு வரும் கார்த்தி?... ரசிகர்கள் குழப்பம்...

சின்னத்திரைக்கு வரும் கார்த்தி?… ரசிகர்கள் குழப்பம்…

-

நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். ஆனால், ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. மேலும், வசூலிலும் தோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை தனது அடுத்தடுத்த படங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி தனது 26 வது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஒரு மசாலா படமாக உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில், அருகிலேயே சீரியல் பாண்டியன் ஸ்டோர் 2 வின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அப்போது நடிகர் கார்த்தியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதே சமயம், நடிகர் கார்த்தி சீரியலில் நடிக்கிறார் என்றும், வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ