spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கிறீர்கள்..... சாய் பல்லவி குறித்து கார்த்தி!

நீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கிறீர்கள்….. சாய் பல்லவி குறித்து கார்த்தி!

-

- Advertisement -

நடிகர் கார்த்தி, நடிகை சாய் பல்லவியை பாராட்டி பேசியுள்ளார்.நீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கிறீர்கள்..... சாய் பல்லவி குறித்து கார்த்தி!

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழிலும் மாரி 2, என் ஜி கே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய்பல்லவி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த சாய் பல்லவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அடுத்தது இவர், ரன்பீர் கபூர் , யாஷுடன் இணைந்து ராமாயணா படத்தில் சீதை ஆக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டேல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 30) இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நீங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கிறீர்கள்..... சாய் பல்லவி குறித்து கார்த்தி!அப்போது பேசிய அவர், “சாய் பல்லவி வாழ்த்துக்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கிறீர்கள். காதல் படமாக இருந்தால் அதிக காதலை கொட்டி தீர்த்து விடுகிறீர்கள். அதனாலயே இளைஞர்கள் பைத்தியமாகத் திரிகிறார்கள். உங்களின் டான்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். அமரன் படத்தைப் பற்றி ஏற்கனவே உங்களிடம் பேசியிருக்கிறேன். மலர் டீச்சராக இருந்தாலும் சரி இந்துவாக இருந்தாலும் சரி அதற்கு உயிர் கொடுக்கிறீர்கள்” என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.

MUST READ