spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபருத்திவீரன் டு மெய்யழகன்..... நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

பருத்திவீரன் டு மெய்யழகன்….. நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் ஒரு நாயகன் உதயமாகினான். பருத்திவீரன் டு மெய்யழகன்..... நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!தாடி மற்றும் அழுக்கு சட்டையுடன் திரையில் தோன்றிய அந்த நாயகன் இன்று மெய்யழகனாக உருவெடுப்பார் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தனது முதல் படத்திலேயே விருதுகளையும் அள்ளி திரைத்துறையில் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து ஸ்டைலிஷான லுக்கில் பையா திரைப்படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உன்னத கலைஞன் வேறு யாரும் அல்ல அது நடிகர் கார்த்திதான். கமர்சியல் படங்களை மட்டும் நம்பாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து புதுப்புது இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்தார். வாய்ப்பளித்து தனது ஒவ்வொரு படங்களிலும் வெற்றி கண்டு வருபவர். இந்த வகையில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஆயிரத்தில் ஒருவனாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பருத்திவீரன் டு மெய்யழகன்..... நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷல்! பையா, தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், சர்தார் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் கார்த்தி. அடுத்ததாக கார்த்தி நடிப்பில் மெய்யழகன் போன்ற படங்கள் உருவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து சர்தார் 2, கைதி 2, தீரன் அதிகாரம் 2 போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பருத்திவீரன் டு மெய்யழகன்..... நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷல்!ரசிகர்கள் பலரும் கார்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் வகையில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம். மேலும் நடிகர் கார்த்தி திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் பலருக்கும் உதவி செய்து ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ