- Advertisement -
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு, நலமுடன் வீடு திரும்பினார்.

சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிரபு மெட்வே மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவருக்கு சிறுநீரகத் நோய்த் தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பூரண குணமடைந்த நடிகர் பிரபு, வீடு திரும்பினார்.