- Advertisement -
நடிகர் ரவி மரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனர் மற்றும் பிரபல நடிகருமான ரவி மரியாவின் சமூக வலைதள பக்கத்தை போலியாக உருவாக்கி மோசடி செய்வதாக புகார் கொடுத்துள்ளார்.


ரவி மரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை போலியாக உருவாக்கி நண்பர்களை நட்பு பட்டியலில் இனைத்து மோசடி செய்வதாக புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பண உதவி கேட்டு பலரை மோசடி செய்ய முயல்வதாகவும் இது குறித்து நடிகர் ரவி மரியா தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல சைபர் கிரைப் காவல் நிலையத்தில் நடிகர் ரவி மரியா புகார் அளித்துள்ளார்.


