spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசரத்குமாரின் கேரவன் பேருந்து மோதி விபத்து... 12 பயணிகள் படுகாயம்...

சரத்குமாரின் கேரவன் பேருந்து மோதி விபத்து… 12 பயணிகள் படுகாயம்…

-

- Advertisement -
சரத்குமார் சமீப காலமாக பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதன்படி இவர் சமீபத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் இன்று வரையிலும் இப் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, பரம்பொருள் என்ற புதிய படத்தில் அமிதாஷூடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.

மேலும் சசிகுமாருடன் நா நா மற்றும் தற்போது கௌதம் கார்த்திக்குடன் கிரிமினல் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவரது திரைப்படங்கள் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது மனைவியும், நடிகையுமான ராதிகாவுடன் இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காமாட்டி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். குடும்ப உறுப்பினர்களுடன் கேரவன் ஒன்றில் சென்றனர்.

சரத்குமார் குடும்பத்தின் கோயில் சென்றடைந்தபிறகு, அந்த கேரவன் அடுத்ததாக திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, எதிரே வந்த பேருந்தின் மீது மோதி கேரவன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ