நடிகர் சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சித்தார்த் கடைசியாக அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படத்தில் நடித்திருந்தார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இந்த படம் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களையும் பெற்றது. இந்த படத்தில் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சித்தார்த் என்ன படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் சித்தார்த் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் குருதி ஆட்டம், எட்டு தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்த தகவலானது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்துள்ளது.
We are extremely happy to join hands with #Siddharth for our Production No.2, to be directed by @sri_sriganesh89.#Siddharth40 @iamarunviswa pic.twitter.com/TUBylI9WW8
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 18, 2024
ஸ்ரீ கணேஷ், சித்தார்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.