- Advertisement -
நடப்பு ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர் கோயில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தகால் நட்டு, திருவிழா தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி விஜயமும் நடந்தது. இதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாகக, வண்டியூர் வீரராகவப் பெருமாள் முன்கூட்டியே வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமன்றி, திண்டுகல், சிவகங்கை, விருதுநகர், ராமநாடு, தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.




