தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த வகையில் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மை லார்ட், ப்ரீடம், எவிடென்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த மே 1 அன்று இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். பொருளாதார சவால்களை சமாளித்து புதிய எதிர்காலத்தை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கை தமிழ் குடும்பத்தின் கதையை பின்னணியாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த ஆதரவிற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், “இந்த படத்தில் வெற்றிக்கு பிறகு என்னுடைய சம்பளத்தை ஏற்ற மாட்டேன். அதே சம்பளம் தான் என்று உறுதியளிக்கிறேன். எனக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
“#TouristFamily is the highest collected film in my career Surpassing KuttyPuli & Sundarapandiyan🔥. 1st Day it collected around 2.5Cr & few of my film done lifetime BO as 2.5Cr too🤞. I’m not going to increase my salary from this success👏♥️”
– Sasikumarpic.twitter.com/QGJeUbtOv8— AmuthaBharathi (@CinemaWithAB) May 13, 2025
ஏனென்றால் நான் தோல்வி அடைந்து இருக்கிறேன். என்னுடைய தோல்வியை ஒவ்வொரு முறையும் ஒப்புக்கொள்கிறேன். இந்த படத்தின் முதல் நாள் கலெக்ஷன் ரூ. 2.5 கோடி. ஆனால் என்னுடைய சில படங்கள் மொத்தமாகவே இவ்வளவுதான் வசூலித்திருக்கிறது. என்னுடைய கேரியரிலேயே சுந்தரபாண்டியன், குட்டி புலி ஆகிய படங்கள் அதிகமாக வசூல் செய்வது என்றால் அதை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அடிச்சி இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.