ஊட்டியில் நடைபெற்ற சூர்யா 44 படப்பிடிப்பு தளத்தில், சண்டை காட்சியின்போது நடிகர் சூர்யாவிற்கு தலையில் காயம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத அவரது 44 வது திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடத்த திட்டமிடப்பட்டது.
ரஜினி சாருடன் நடிச்சது கனவு மாதிரி இருக்கு…. ‘வேட்டையன்’ படம் குறித்து துஷாரா!
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு படமாக்கப்பட சண்டைக்காட்சியின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் சூர்யா 44 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நடிகர் சூர்யா ஓய்விற்கு பிறகு இன்னும் சில நாட்களில் மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.