Homeசெய்திகள்சினிமாதி கோட் படம் வேற லெவலில் இருக்கும்..... நடிகர் வைபவ்!

தி கோட் படம் வேற லெவலில் இருக்கும்….. நடிகர் வைபவ்!

-

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்தில் நடித்துள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.தி கோட் படம் வேற லெவலில் இருக்கும்..... நடிகர் வைபவ்! இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் விஜய். மேலும் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ‘விசில் போடு’ எனும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தி கோட் படம் வேற லெவலில் இருக்கும்..... நடிகர் வைபவ்!இந்நிலையில் நடிகர் வைபவ் சமீபத்தில் நடந்த பேட்டியில், “தி கோட் படம் வேற லெவலில் இருக்கும். இது பயங்கரமான ஒரு ஆக்சன் பொழுதுபோக்கு படம். இந்த படத்தில் தளபதியுடன் எனது காட்சிகள் இருக்கின்றன. மேலும் இரண்டு தளபதிகளை நேரில் பார்த்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அதே சமயம் இரண்டு தளபதியின் நடிக்கும் அற்புதமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ