நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து விஜய் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தளபதி 69 படத்திற்கு பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் விஜய், ஆரம்பத்தில் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தது போல் அரசியல் தலைவராக மாறிய பின்னரும் தனது நலத்திட்டங்களை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகர் விமலிடம் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விமல் கொடுத்த பதில் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அதாவது நடிகர் விமல் தற்போது சார், போகுமிடம் வெகு தூரம் இல்லை, தேசிங்கு ராஜா 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் விமல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விமலிடம், “விஜயின் அரசியலுக்கு வந்துள்ளார் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு விமல் “தெரியலைங்க” என்று பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் விமல் தந்த இந்த பதிலுக்கு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் நடிகர் விமல் விஜயுடன் இணைந்து கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.