நடிகை ரம்யா தான் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதையடுத்து தனுஷ் உடன் பொல்லாதவன், தூண்டில், சூர்யா உடன் வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ரம்யா தான் தற்கொலைக்கும் முயன்றதாக தெரிவித்துள்ளார்.
“நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்னுடைய அப்பா இறந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இல்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் தற்கொலை செய்யக்கூட முயற்சி செய்தேன். அப்போது ராகுல் காந்தி எனக்கு ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்தார்” என்று ரம்யா தெரிவித்துள்ளார்.