spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை... மனம் திறந்த ராதிகா ஆப்தே...

தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமை… மனம் திறந்த ராதிகா ஆப்தே…

-

- Advertisement -
தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு கொடுமைகள் அரங்கேறுவதாக, பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமானார். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை ராதிகா.

we-r-hiring
இப்படத்தைத் தொடர்ந்து இந்தியில் அந்தாதூன், லஸ்ட் ஸ்டோரீஸ், சோக்ட் ஆகிய திரைப்படங்களில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மொழி மட்டுமன்றி அவர் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைகளுக்கும் பிரபலம். பல பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர், தெலுங்கு சினிமா குறித்து பேசி உள்ளார். அந்த பேட்டியில், தெலுங்கு திரையுலகம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது எனவும், தாங்க முடியாது அந்த அளவிற்கு பெண்களை மோசமாக நடத்துகின்றனர். நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. அங்கு நான் ரொம்ப கடினப்பட்டேன். இதனால் தான் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன் என்று ராதிகா தெரிவித்துள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ