நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் திரைத்துறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கீத கோவிந்தம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற இவர், தமிழிலும் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தது குபேரா, தி கேர்ள் ஃப்ரெண்ட், சிக்கந்தர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் 24 வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ராஷ்மிகாவிற்கு விபத்து ஏற்பட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் ராஷ்மிகாவை ஓய்வில் இருக்குமாறு கூறியுள்ளதாகவும் அதனால் ராஷ்மிகாவின் ஷூட்டிங் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.