திருமணத்தால் சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை – நடிகை சதா
- Advertisement -

ஒரு கால கட்டத்தில் கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை சதா. அதுமட்டுமன்றி இந்திய அளவில் பல மொழிகளில் நடித்த பிரபலமான நடிகையும் ஆவார். அவர் தமிழில் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்த ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றியை பெறவே சதாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அடுத்தடுத்து அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின

அஜித், மாதவன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து சதா நடித்திருந்தார். ஒரு இடைவௌிக்கு பிறகு வினய்க்கு ஜோடியாக உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தார். இத்திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகிய சதா, டார்ச்லைட்’ உள்ளிட்ட சில படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாத சதா போட்டோகிராபியில் இறங்கினார். இதற்கிடையில் மும்பையில் ‘எர்த்லிங்ஸ் கஃபே’ என்ற ஹோட்டலையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொண்டு தனது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை என்று நடிகை சதா தெரிவித்துள்ளார். 40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பேசிய அவர், தற்போது சுதந்திரமாக வாழ நினைக்கிறேன், என் மனதுக்கு பிடித்த நபர் இதுவரை நான் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.