spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!!

இயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!!

-

- Advertisement -

கோவையில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநா் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.இயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!! தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கூறி கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். நடிகை சமந்தா, ராஜ் நிதிமோர் இயக்கிய தி பேமலி மேன் 2-ஆம் பாகத்தில்  நடித்திருந்ததார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, காதல் மலா்ந்துள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இன்று கோவை ஈஷா மையத்தில் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் ராஜ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே இயக்குநர் ராஜ்வுடனான திருமணத்தை நடிகை சமந்தா போட்டோ வெளியிட்டுள்ளார். இயக்குநர் ராஜ் நிதிமோர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை இயக்கி, தயாரித்துள்ளார். சமீபத்தில் தி பேமலி மேன் 3-வது பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ராஜ் நிதிமோர் இயக்கிய தி பேமலி மேன் 2-ஆம் பாகத்தில்  நடித்திருந்ததார்.

அருண் விஜயின் ‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதியில் மாற்றம்…. படக்குழு அறிவிப்பு!

we-r-hiring

MUST READ