Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘புஷ்பா 2’ படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா எனும் திரைப்படம் வெளியானது. முதல் பாகமாக வெளியாகி இருந்த இந்த படத்திற்கு புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. 'புஷ்பா 2' படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!இதனை சுகுமார் இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. மேலும் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வரும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்து இருந்த ராஷ்மிகா, பகத் பாஸில் ஆகியோர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதை தொடர்ந்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் படக்குழு இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது புஷ்பா 1 திரைப்படத்தில் சமந்தா நடனமாடியிருந்த ‘ஊ சொல்றியா மாமா’ பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. எனவே இரண்டாம் பாகத்தில் அது போன்ற பாடல் இருக்குமா? அதற்கு யார் நடனமாட போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் நடிகை ஸ்ரீ லீலா, ‘கிஸ்ஸிக்’ எனும் ஸ்பெஷல் பாடலுக்கு நடனாடியுள்ளார் என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே இந்த பாடல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ