- Advertisement -
கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நடிகை த்ரிஷா அடுத்ததாக பாலிவுட் திரை உலகில் நடிக்க உள்ளார். முதல் படத்திலேயே சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சல்மான் கான் டைகர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய அளவில் பேசப்பட்ட டைகர் எனும் பெயரை வைத்து 2017ல் ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற படமும் வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகமாக டைகர் 3 திரைப்படம் மணிஷ் ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தை யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதில் சல்மான் கான் உடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார்.



