நடிகை திரிஷா தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள இவர் தற்போது மீண்டும் விஜய், அஜித், சூர்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதன்படி சூர்யா 45 திரைப்படத்தை ஏற்கனவே கைவசம் வைத்துள்ள திரிஷா, கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடுத்தது வருகின்ற ஏப்ரல் 10அன்று திரைக்கு வர உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் திரிஷா. இப்படத்தில் திரிஷா அஜித்துக்கு மனைவியாக ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா குறித்து பேசி உள்ளார். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரசனிடம், “விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா எப்படி நடிக்க வந்தார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் போது தான் தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த கதையை திரிஷாவிடம் சொன்னேன். ஆனால் அதற்கு முன்பாகவே அஜித் சார் அந்த கதையை திரிஷாவிடம் சொல்லிவிட்டார்.
Dir #Adhikravichandran Recent
– How did #Trisha get into acting in this film…?
– I told this story over a phone call while filming #VidaaMuyarchi.
– Ajith sir had already told this story to Trisha Mam before I could tell him.
– #GoodBadUgly : Ramya
pic.twitter.com/1HpZYRYWiQ— Movie Tamil (@MovieTamil4) April 7, 2025
பொதுவாகவே எல்லா ஹீரோயின்களும், ஹீரோவை விட தனக்கு முக்கியத்துவம் குறைவாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் அஜித் சார், இந்த படத்தில் நடிக்கும் அத்தனை பேரின் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி இந்த படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.