தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் கடைசியாக தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோரின் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கியிருந்த மதகஜராஜா எனும் திரைப்படம் 11 ஆண்டுகள் கழித்து 2024 செப்டம்பர் மாதத்தில் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சுந்தர் சி ,வடிவேலு மற்றும் தமன்னா கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி சுந்தர்.சி தனது அடுத்த படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார் எனவும் அந்த படத்தில் வடிவேலு மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் எனவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படமானது அரண்மனை பாகங்களின் வரிசையில் இல்லாமல் தனி ஒரு புதிய படமாக உருவாகி வருகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படம்….. தென்காசியில் படப்பிடிப்பு தீவிரம்!
-
- Advertisement -