- Advertisement -
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அஜித் ரசிகர்கள் மறைமுகமாக தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசும், அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் உதவிகள் செய்து வருகின்றனர். அதேபோல் பிரபலங்களில் சூர்யா-கார்த்தி, ஹரிஷ் கல்யாண் என நிதி உதவி செய்ய, விஜய் ரசிகர்கள், நடிகர் பார்த்திபன் ஆகியோர் சாலையில் இறங்கி உணவுகளை வழங்கி வருகின்றனர். வெள்ள பாதிப்பு குறித்து பதிவிட்ட நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் முடிந்த அளவு மக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து, விஜய் மக்க இயக்க நிர்வாகிகள் மட்டுமன்றி விஜய் ரசிகர்களும் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.



