நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பிற்கு சிறிய இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 30 சதவீத படப்பிடிப்புகளை படமாக படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். எனவே நடிகர் அஜித்தும் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துவிட்டு தற்போது அஜர்பைஜானுக்கு விடாமுயற்சி இறுதி கட்ட படப்பிடிப்புக்காக விரைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
AK Leaving To Azerbaijan To Kick Start The Final Schedule of #VidaaMuyarchi💥💥
THALA DIWALI 💯 #AjithKumar || #GoodBadUgly pic.twitter.com/Sp4wMcGbB4
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) June 19, 2024
மேலும் அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸாகி ஒரு வருடங்கள் முடிந்த நிலையில் அஜித் படங்கள் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர். ஆதலால் விடாமுயற்சி படத்தினை விரைவில் முடித்துவிட்டு 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.