spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'..... ஒரு விரல் சர்ச்சைக்கு படக்குழுவின் விளக்கம்!

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’….. ஒரு விரல் சர்ச்சைக்கு படக்குழுவின் விளக்கம்!

-

- Advertisement -

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் அஜர்பைஜானில் மீண்டும் தொடங்க இருக்கிறது. அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'..... ஒரு விரல் சர்ச்சைக்கு படக்குழுவின் விளக்கம்!அதேசமயம் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான் சமீபத்தில் எதிர்பாராத விதமாக படக்குழு குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில் நடிகர் அஜித் மூன்று விதமாக மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பது போன்று காண்பிக்கப்பட்டார். அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'..... ஒரு விரல் சர்ச்சைக்கு படக்குழுவின் விளக்கம்!அதில் இடது புறத்தில் இருக்கும் அஜித் ஒரு விரலை காட்டுவது போன்று போஸ்டரில் அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் அஜித் பொதுவாக பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் கூட செய்தியாளர்களிடம் வாக்களித்ததன் அடையாளமாக ஒரு விரலை காட்டாமல் ஐந்து விரல்களையும் காட்டி இருந்தார். ஏனென்றால் அந்த ஒரு விரல் என்பது இரட்டை அர்த்தங்களை தரக்கூடியது. இந்நிலையில் குட் பேட் அக்லி பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித்தின் நடு விரல் பிளர் செய்யப்பட்டிருந்தாலும் இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக, அஜித்தின் குணாதிசயங்களை உடனடியாக வெளிப்படுத்தும் காட்சியாக இருக்கும் என்பதால் தான் அதனை முதல் தோற்றத்தில் வைக்க முடிவு செய்ததாக படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாம்.

MUST READ