அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தினை மீகாமன், தடம், தடையற தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர். மேலும் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அஜர்பைஜான் ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி பாடல் காட்சி ஒன்றை தவிர படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. விரைவில் பாடல் காட்சியை படமாக்க பட குழு இத்தாலி செல்ல உள்ளது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படம் ஆரம்பத்தில் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தால் 2024 டிசம்பர் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் டீசர் இந்த வாரத்தில் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.