Homeசெய்திகள்சினிமாஅஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.....'ஏகே 63' படத்தின் டைட்டில் வெளியீடு!

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…..’ஏகே 63′ படத்தின் டைட்டில் வெளியீடு!

-

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இதற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.....'ஏகே 63' படத்தின் டைட்டில் வெளியீடு!

அதே சமயம் நடிகர் அஜித் தனது 63 வது படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது சம்பந்தமான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தின் பூஜை ஏற்கனவே சென்னையில் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஏகே 63 படம் சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.....'ஏகே 63' படத்தின் டைட்டில் வெளியீடு!அதன்படி ஏகே 63 படத்திற்கு குட் பேட் அக்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க போவதாகவும்  இதன் படப்பிடிப்பு ஜூன் 2024 முதல் தொடங்க போவதாகவும் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் அழுத்தியுள்ளது.

MUST READ